
இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி
சமாதானத்தை நான் ஆத்ம பூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக சமாதானமாக சுதந்திரமாக கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலே தான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்று புறநிலை தோன்றியிருக்கின்றது.
ஐய நின் மேனியின் அழகதும்,
நெஞ்சினில்
அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,
அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்
அரவணைக் கின்ற பேரழகும்,
வேய்யர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்
விரிகின்ற கோபத்தின் அழகும்,
விடுதலைக் கானநேர் வீதியை என்றுமே
விட்டறி யாதநின் அழகும்,
பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்
புலியென நிமிர்த்திய அழகும்,
புவியினில் இன்றுள்ள தமிழரின் வாயெல்லாம்
பேசிடும் உன்பெயர் அழகும்
வையகம் உள்ளள வாகுக, அதுவரை
வயதுனக் காகுக அழகா.
வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ்
வாசலில் வாழுக தலைவா.
- புதுவை இரத்தினதுரை.